5 நாள் ‘மெகா ரெய்டு’...! தேடியது என்ன ? கிடைத்தது என்ன ? முழுவிவரம்.


சசிகலா குடும்பத்தில் நடந்த 5 நாள் ‘மெகா ரெய்டு’ வருமான வரித்துறை கைப்பற்றியது, கண்டுபிடித்தது என்ன?

சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய ‘மெகா’ ரெய்டில் சிக்கிய விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.

இந்த ரெய்டில் வருமான வரித்துறையினர் வசம் ஏராளமான ஆவணங்கள், நகைகள், பணம், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் கடந்த 9-ந் தேதி முதல் 13ந்ேத தி வரை வருமானவரித்துறையினர் மெகா சோதனையில் ஈடுபட்டனர். ஏறக்குறைய 187 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 1800 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

சென்னை, மன்னார்குடியில் துவங்கி, ஐதராபாத், பெங்களூரு ,  புதுச்சேரி ஆகிய இடங்களில் சசிகலாவுக்கும், உறவினர்களுக்கும் சொந்தமான வீடுகளில் சோதனை நடந்தது.

சசி குடும்பத்தின் பிடியில் உள்ள, ஜெயா, 'டிவி' மற்றும், 'மிடாஸ்' சாராய ஆலையிலும், தினகரனின் வீடு, மன்னார்குடியில், திவாகரன் வீடு மற்றும் அவர்களது சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் ,பணியாளர்கள் வீடுகள் , ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்கள், கல்லூரிகள் உட்பட 187 இடங்களில் தொடர் வருமான வரி சோதனைகள் நடந்தன.

முதல்கட்டமாக அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார், புகழேந்தி ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜரானார்கள். பின்னர் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் நேரில் ஆஜராக சம்மன்கள் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.



இந்நிலையில் திடீர் திருப்பமாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் நிர்வாக இயக்குனருமான விவேக் ஜெயராமனும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த 5 நாள் ரெய்டில் வருமானவரித்துறைக்கு கிடைத்துள்ள விவரங்கள், கண்டுபிடிப்புகள் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

1. ரூ. ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு
தி ஏசியன் ஏஜ் இணையதளம் வௌியிட்டுள்ள செய்தியில், “ சசிகலாவும், அவரின் குடும்பத்தினர்களும் ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளனர். போலியாக பல நிறுவனங்களை நடத்தி, 50 வங்கிக்கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்துள்ளனர். ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தி, குறைந்த முதலீட்டில் இயக்கியுள்ளனர். ஏறக்குறைய ரூ.6 கோடி ரொக்கப்பணம், 8.5 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக’’ அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

100 வங்கிக்கணக்குகள் முடக்கம்
இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், ஜெயா தொலைக்காட்சியின் மேலான் இயக்குநராக இருந்து வருகிறார். இந்த ரெய்டில் முக்கியமானநபராக கருதப்பட்டவர் விவேக் ஜெயராமன். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில், “ விவேக் ஜெயராமனுக்கு சொந்தமாக போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 100 வங்கிக்கணக்குகள் செயல்பட்டது தெரியவந்துள்ளது. இந்த வங்கிக்கணக்குகள் அனைத்தையும் முடக்கியுள்ளனர்’’ எனத் தெரிவித்துள்ளது. 

ஆனால், விவேக் ஜெயராமன் தரப்பினர் மறுக்கின்றனர். அவர்கள் கூறுகையில், “ எந்தவிதமான வங்கிக்கணக்கையும் வருமானவரித்துறையினர் முடக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.

இது குறித்து வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், “ விவேக் வீட்டில் இருந்து போலி நிறுவனங்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றி இருக்கிறோம். அவரின் சகோரி கிருஷ்ணப்பிரியாவின் வீட்டிலும், தணிக்கையாளர்  வீட்டில்  இருந்தும் ஏராளமான ஆவணங்களை எடுத்துள்ளோம். இந்த சொத்துக்கள் பினாமியுடையதுதானா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

மகளிர் விடுதியில் சிக்கிய ஆவணங்கள்..
சசிகலாவின் சகோதரர் திவாகரன் மன்னார்குடி அருகே சுந்திரக்கோட்டையில் செங்கமலத் தாயார் அறக்கட்டளை மூலம் மகளிர் கல்லூரி ஒன்று நடத்தி வருகிறார். இந்த கல்லூரியில் வருமானவரித்துறையினர் நடத்திய ஆய்வில் பலகோடிகள் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள், மகளிர் தங்கும்விடுதியில் பயன்படுத்தப்படாத அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த அறை கல்லூரி முதல்வர் அறைக்கு அருகே இருந்தது என்று வருமானவரித்துறைனர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வருமானவரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ இப்போதுள்ள நிலையில்  கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்புகள், நகைகள், பணம் ஆகியவை குறித்து அறிக்கை ஏதும் வெளியிடக்கூடாது. இந்த ஆப்ரேஷன் மற்றும் ஆவணச்சரிபார்ப்பு முடியும் வரைஏதும் கூறக்கூடாது. ஆனால், பலகோடி மதிப்புள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், தங்கம், விலைமதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.