காவல்நிலையத்தில் வழக்கறிஞரை தாக்க முயன்றதாக வழக்கு.


சொத்துப் பிரச்சனை குறித்த சிவில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக பேச வேளச்சேரி காவல் நிலையத்திற்கு சென்றபோது, எதிர்தரப்பினர் தன்னை தாக்க முயன்றதாக வழக்கறிஞர் இளமுகிலன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வேளச்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அறையில் இந்த சம்பவம் நடைபெற்றபோது, ஆய்வாளர் தடுக்காமல் இருந்தாக மனுவில் வழக்கறிஞர் கூறியிருந்தார். மேலும், காவல் நிலையத்தில் தன்னை தாக்க முயன்றவர்கள் மற்றும் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் இளமுகிலன் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, தன்னை தாக்க முயன்ற சம்பவம், காவல்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளதாக வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது.
இதையடுத்து வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், சிசிடிவி வீடியோ பதிவு எதுவும் இல்லை என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், சி.சி.டி.வி. பதிவுகளை அரசு தரப்பு தாக்கல் செய்யாவிட்டால், டி.ஜி.பி. அல்லது சென்னை மாநகர காவல் ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனக்கூறி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.