யூடியூப்பில் பார்வையாளர்களை ஈர்க்க காதலனை துப்பாக்கியால் சுட்ட காதலி.


யூடியூப் பக்கத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற ஆசைப்பட்ட காதலனை, அவனது காதலி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
பெட்ரோ ரூய்ஸ் எனும் இளைஞர், யுடியூப்பில் அதிக பார்வையாளர்களைக் கவர, கனமான என்சைக்லோபீடியா புத்தகத்தை தம் மார்பை ஒட்டி வைத்துக்கொண்டு, அதை துப்பாக்கியால் சுடுவது என முடிவெடுத்தார்.
இதற்காக தம்மை துப்பாக்கியால் சுட காதலி மோனாலிசாவிடம் வெகு நேரம் பேசி சம்மதித்து அவரிடம் துப்பாக்கியையும் கொடுத்தார். இந்நிலையில், ஒருஅடி தூரத்தில் நின்று சக்திவாய்ந்த துப்பாக்கியில் மோனலிசா கூட்டதில், புத்தகத்தைத் துளைத்த குண்டு பெட்ரோவின் உயிரையும் பறித்தது.
சம்பவத்துக்கு முன்னதாக தம்மிடம் காதலன் முன்கூட்டியே முயற்சித்த புத்தகத்தைக் காட்டியதாகவும், அதில் தோட்டா வெளியேறியதற்கான துளை இல்லை எனவும் விளக்கமளித்ததையடுத்து, இந்த வழக்கில் கைதான பெட்ரோவின் காதலி மோனலிசா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.