கண்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி வங்கிக்கு சொந்தமானது தான் – சி.பி.ஐ. அறிக்கை.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது திருப்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் 3 கண்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வங்கிக்குச் சொந்தமானது தான் என்று சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி இரவு 1 மணியளவில் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர், சந்தேகத்துக்கிடமான வகையில் உரிய ஆவணங்கள் இன்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட 570 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடரபான வருமான வரித்துறை விசாரணையின் போது இந்தப் பணம் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கோவை கரூவூலத்துக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. இன்று மூடி முத்திரையிட்ட உரையில் தனது அறிக்கையை தாக்கல் செய்ததாகக் கூறப்பட்டுகிறது. அந்த அறிக்கையில் இந்த 570 கோடி ரூபாய் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவுக்கு சொந்தமானதுதான் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.