டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடிய விடிய கடை முன்பாக அமர்ந்து பெண்கள் போராட்டம்.


காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லி கிராமத்தில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சரமாரியாகக் கற்களை வீசிய அவர்கள், கடையில் இருந்த மதுபாட்டில்களை சாலையில் வீசி உடைத்தெறிந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கட்டிமாங்கோடில், டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி பெண்கள் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடையை மூடுவதற்கு அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால், கடையை மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் எனக் கூறிய பெண்கள், இரவு முழுவதும் அதே இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.