உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை- சி.வி.சண்முகம்.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தி.மு.க. ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாகவும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
நான்கு மாநிலங்களில் அந்த மாநில மொழி உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக இருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.