செய்யது பீடி நிறுவன குழுமம் ரூ.161.56 கோடி வரி ஏய்ப்பு.


செய்யது பீடி நிறுவன குழுமம், 161 கோடியே 56 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
63 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 5 கோடியே 74 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்த ஆவணங்களை மதிப்பீடு செய்த போது, அதில் கணக்கில் காட்டாத பீடி விற்பனையின் மூலம் 46 கோடியே 10 லட்சம் ரூபாயும், செலவு செய்ததாக ஆவணங்கள் தயார் செய்து 49 கோடியே 50 லட்சம் ரூபாயும் செய்யது நிறுவன குழுமம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
கணக்கில் காட்டப்படாத நூல் மற்றும் கழிவு பருத்தி மூலம் 8 கோடியே 10 லட்சம் ரூபாயும், ஊழியர்கள் பெயரில் 13 கோடி ரூபாயும், கணக்கில் காட்டப்படாத முதலீடுகள் மூலம் 44 கோடியே 86 லட்சம் ரூபாயும் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.