இந்திய பெருங்கடலில் உலா வரும் சீனக் கப்பலை உன்னிப்பாக கண்காணிக்கிறது ருக்மிணி செயற்கைக்கோள்.


இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா அதன் துருப்புக்களை அதிகரித்து வரும் நிலையில், ருக்மிணி செயற்கைக்கோள் சீனக் கப்பல்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு செயற்கைக்கோளான ருக்மிணி எனப்படும் ஜிசாட்-7 செயற்கைக்கோள், இந்திய கடற்படையின் கண்காணிப்புப் பணிக்காகவே விண்ணில் ஏவப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்பாட்டில் இருக்கும் ருக்மிணி உதவியுடன் 2000 நாட்டிக்கல் மைல் தூரம் வரை இந்தியப் பெருங்கடல் பகுதியை கண்காணிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் உலவும் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களின் நேரடித் தகவல்களை ருக்மிணி இந்திய கடற்படைக்கு வழங்கி வருகிறது. அத்துடன், இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள் இடையிலான தகவல் தொடர்பையும் ருக்மிணி செயற்கைக்கோள் எளிமைப்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.