நீதிமன்ற உத்தரவுக்கு துணை நிலை ஆளுநரின் பதில் என்ன – புதுச்சேரி முதல்வர் கேள்வி.


புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. லக்ஷ்மி நாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன், எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுவிட்டதால், ஏற்கெனவே மனுவில் உள்ள கோரிக்கைகளைத் திருத்தம் செய்து தாக்கல் செய்துள்ள புதிய மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரினார்.
நியமனத்தை ரத்து செய்யுமாறு அளிக்கப்பட்ட புதிய மனுவின் மீது பதிலளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், புதுச்சேரி மாநில தலைமை செயலாளர், இணைச் செயலாளர், 3 நியமன எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக, (CENTAC) சென்டாக் சரியாகவே செயல்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கும், நியமன எம் எல் ஏக்களாக குறுக்கு வழியில் பாஜக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டததற்கும் மத்திய அரசு விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கும் துணை நிலை ஆளுநர் என்ன பதில் சொல்லப் போகிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.