நாடு முழுவதும் வரும் 12-ஆம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது-பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம்.


நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் வரும் 12ந்தேதி மூடப்படும் என்று, பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தினசரி மற்றியமைக்கப்படும் பெட்ரோல், டீசல் விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அகில இந்திய பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம், இதனால் வெளிப்படைத்தன்மையை இழந்து, விலை நிர்ணயித்தலில் குளறுபடிகள் ஏற்படும் என்று கூறிவந்தன. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில், பெட்ரோல் பங்குகளில் தானியங்கி தொழில்நுட்பத்தை செயல்படுத்தி தருவதாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன.
ஆனால், அந்த பணிகள் இதுவரை முழுமை பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலைநிறுத்த போராட்டத்தை பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 5ந்தேதி எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் நிறுத்தப்படும் என்றும், அதைத்தொடர்ந்து 12ந்தேதி, நாடு முழுவதும் விற்பனை நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.