வடகொரியா விவகாரத்தில் இனி பொறுமையை கடைபிடிக்கப் போவதில்லை – டிரம்ப்.


வடகொரியா விவகாரத்தில் இனி பொறுமையாக இருக்கப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டொனால்ட் டிரம்ப், வடகொரியாவின் பொறுப்பற்ற, கொடூர செயல்பாடுகளால் அமெரிக்காவும், தென் கொரியாவும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து கவலைப்படாத சர்வாதிகார அரசாக திகழும் வடகொரியா, மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இதுவரை வடகொரியாவுடனான விவகாரங்களில் கடைபிடித்து வந்த பொறுமை தோல்வி அடைந்து விட்டதாக கூறிய டிரம்ப், வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் அமெரிக்கா பொறுமையை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.