12 சிங்கங்களின் புடை சூழ குழந்தை பெற்றெடுத்த பெண்.


குஜராத்தில் சிங்கங்கள் புடை சூழ கர்ப்பிணி ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
அம்ரேலி கிராமத்தில் இரவு நேரத்தில், பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அதன் ஊழியர்கள் அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 12 சிங்கங்கள் சாலையை மறித்து நின்றன.
சிங்கங்கள் தாமே விலகிச்செல்லும் வரை காத்திருக்க முடிவு செய்து வண்டியை நிறுத்தியபோதும் அவை நகர்வதாகத் தெரியவில்லை. கர்ப்பிணியும் வலியால் துடித்துக் கொண்டிருக்க பிரசவ நேரம் நெருங்கியது.
எனவே, ஆம்புலன்ஸ்-ல் இருக்கும் செவிலிய உதவியாளர் மருத்துவரிடம் செல்போன் மூலம் செய்முறை விளக்கங்களைப் பெற்று அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.
சுமார் 25 நிமிடங்கள் நீடித்த பிரசவ நேரம் முழுவதும், ஆம்புலன்ஸ் வாகனத்தை சூழ்ந்துகொண்டு வீரநடை போட்டு வந்த 12 சிங்கங்களும் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் வாகனத்தை முன்னேற அனுமதித்து விலகிச் சென்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.