காசிமேடு புதிய மீன் மார்க்கெட்டை திறப்பதற்கான தடை நீக்கம்.


சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காசிமேட்டில் துறைமுகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள பழைய மீன்மார்க்கெட்டிற்கு பதிலாக, மற்றொரு இடத்தில், தமிழக அரசு புதிய மீன் மார்க்கெட்டை அமைத்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தடை கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி துரைசாமி, ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதாகவும், புதிய மீன் மார்க்கெட்டை திறக்கலாம் என்றும் உத்தரவிட்டார். யாராவது சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி துரைசாமி, வழக்கை முடித்துவைத்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.