கதிராமங்கலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 9 பேர் கைது.


தஞ்சை மாவட்டம் கதிரமங்கலத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தையடுத்து, கைதான 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 7 எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைத்துள்ளது.
குத்தாலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அங்கிருந்து பைப் லைன் மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வனத்துர்க்கை அம்மன் கோவில் பகுதியில், பைப் லைனில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
அதன் அருகே பல்வேறு இடங்களில் பைப் லைனில் கசிவு ஏற்பட்டு புகையுடன் எண்ணெய் கொப்பளித்தது. இதனால் அச்சமுற்ற பொதுமக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூட வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். எண்ணெய்க் குழாய் கசிவு மற்றும் போராட்டத்தை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டதுடன் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
அமைதியாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாலையில் கசிவு ஏற்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதற்கு காரணம் போலீஸ் என்றும், பொதுமக்கள் என்றும் இருதரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது காவல்துறையினர் மீது கற்களை வீசி பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடவில்லை என்றால் போராட்டம் மேலும் வலுவடையும் என்று பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே சாலைமறியலில் ஈடுபட்ட மீத்தேன் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், 3 பெண்கள் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களில் ஒன்பது பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தல், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் இன்று காலை கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.