இந்தியா – இஸ்ரேல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து.


இந்தியா – இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே விண்வெளி ஆராய்ச்சி, விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து, தீவிரவாத ஒழிப்பு, இருதரப்பு உறவு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். இன்று, இஸ்ரேல் அதிபர் ரியூவன் ரிவ்லினை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, இந்தியாவுக்காக இஸ்ரேலும், இஸ்ரேலுக்காக இந்தியாவும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து, பிரதமர் மோடி – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான 3 ஒப்பந்தங்களும், தண்ணீர் துறை சார்ந்த 2 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. அதேபோல், விவசாய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.