விரைவில் அனைத்து வீடுகளுக்கும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் - அமைச்சர் மணிகண்டன்


விரைவில் அனைவருக்கும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதில் அளித்துப் பேசிய அவர், அரசு கேபிளுக்கு மத்திய அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கியதையடுத்து விரைவில் அனைவருக்கும் அரசின் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று கூறினார்.
சென்னை சோழிங்கநல்லூரில் 80 கோடி ரூபாய் செலவில் 2 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 9 மாடி தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
70 கோடி ரூபாய் செலவில் தமிழ் உரை மற்றும் பேச்சு மென் பொருள் உருவாக்கம், கிராமப்புற மக்களுக்கு 80 கோடி ரூபாய் செலவில் கணினி பயிற்சி, அரசை மக்கள் எளிதில் தொடர்பு கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள நமது அரசு என்ற வலைதளம் உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் மணிகண்டன் வெளியிட்டார்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.