ரூ.10 கோடி பழைய பணத்தை மாற்றித்தருவதாக கூறி ஏமாற்றிய நபரை கடத்த முயற்சி.


காஞ்சிபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு என்பவரிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாக கூறி கன்னியாகுமரியை சேர்ந்த செல்வராஜ் என்கிற ராஜன் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர் தங்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறிமுதல் செய்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் தான் சி.பி.சி.ஐ.டி போலீசார் என்று கூறி பணத்தை பறித்துச் சென்றவர்கள் ராஜனின் கூட்டாளிகள் என்பதை பாபு அறிந்துள்ளார். அத்துடன் பணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு ராஜனிடம் பாபு வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் பணத்தை தராமல் ராஜன் இழுத்தடித்து வந்ததால், அவரை கடத்தி பணத்தை வசூலிக்க பாபு முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கத்தில் விடுதி ஒன்றில் தங்கிடியிருந்த ராஜனை கடத்த வந்த பாபுவின் கும்பல், அங்கிருந்த டிரைவர் ரிஜிவை கடத்திச் சென்றுள்ளது. அத்துடன் பத்து கோடி ரூபாய் பணத்தை ஒப்படைத்தால் தான் ரிஜிவை விடுவிக்க முடியும் என்று பாபு கும்பல், ராஜனை மிரட்டியுள்ளது. இதனால் பயந்து போன ராஜன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
துரிதமாக செயல்பட்ட போலீசார் அம்பத்தூர் அருகே பாபு தலைமையிலான கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து, டிரைவர் ரிஜிவை மீட்டது. அத்துடன் ரூபாய் நோட்டு மாற்று மோசடி உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.