சென்னையில் 100 கிலோ குட்கா போதைப் பொருள்கள் பறிமுதல்.


சென்னையில் திடீர் சோதனை நடத்திய உணவுப் பாதுகாப்புத்துறையினர், தடை செய்யப்பட்ட 100 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை – சூளை பகுதியில் ஒரு குடோனில் குட்கா பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். அவதானு பாப்பையா ரோட்டில் கடை ஒன்றின் அருகே உள்ள குடோனில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு பல்வேறு வகையான குட்காக போதைப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து குடோனுக்கும், கடைக்கும் சீல் வைத்த அவர்கள், 100 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். குட்கா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம் என உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி லோகநாதன் தெரிவித்தனர். பொதுமக்கள் புகார்களைத் தெரிவிக்க என்னென்ன எண்கள் வழங்கப்பட்டுள்ளன என லோகநாதனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், தொடர்பு எண்ணை தெரிவிக்காமல் அதிகாரிகள் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்பிக் கொண்டு விழித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.