கனடா உதயமானதன் 150-வது ஆண்டு கொண்டாட்டம் கோலாகலம்.


கனடா நாடு உதயமானதன் 150-வது ஆண்டு கொண்டாட்டம் உற்சாகம் ததும்ப நடைபெற்றது.
சுமார் 5 லட்சம் பேர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். கனடா நாடாளுமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் அங்கு திரண்டிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பழங்குடியினரின் நடன நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. 1867-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட்டு கனடா தனி நாடானதன் 150-வது ஆண்டு தினக் கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, திரையுலக பிரபலங்கள், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது துணைவி கமிலா ஆகியோர் பங்கேற்றனர்.
டூரூடோ வழக்கம் போல் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். லட்சக்கணக்கானோர் கூடிய கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.