உ.பி. பாஜக குண்டர்களை அடக்கிய பெண் போலீஸ் அதிகாரி நேபாள எல்லைக்கு இடமாற்றம்உ.பி. மாநில பாஜக குண்டர்களின் அராஜகத்தை கண்டித்து அடக்கியதாக பெண் போலீஸ் அதிகாரி ஷ்ரேஸ்தா தாக்குர் என்பவரை நேபாள் எல்லையருகே உள்ள பஹ்ரைச் என்ற இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கூறும்போது, “என் பணிகளுக்கான பரிசாக இதனை ஏற்றுக் கொள்கிறேன். நண்பர்களே கவலைப்படாதீர்கள் என்னுடைய நல்ல பணிக்கான பரிசாகவே இதைப்பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் பஹ்ரைச்சிற்கு அழைக்கிறேன்” என்றார்.மேலும் அவர் கூறும்போது, “எங்கு வைக்கப்பட்டாலும் விளக்கு ஒளியையே கொடுக்கப்போகிறது. விளக்குக்கு தனக்கான வீடு என்று எதுவும் இல்லை” என்று கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் பலரது பாராட்டையும் ஈர்த்துள்ளது. பாஜக தொண்டர்கள் விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட போது பாஜகவைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்ததோடு, கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததற்காக 5 பேருக்கு அபராதம் விதித்தார்.அவர்கள் கடுமையாக எதிர்ப்புக் காட்டி கோஷம் எழுப்பியபோது, “போலீஸுக்கு வாகனச் சோதனை செய்ய உரிமையில்லை, நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய முடியாது என்று முதல்வரிடமிருந்து எழுத்து பூர்வ உத்தரவு வாங்கி வாருங்கள்” என்று ஷ்ரேஸ்தா தாக்குர் அவர்களிடம் பேசியதும் வெளியானது. இதனையடுத்து 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி. ஆகியோர் இவரைப் பற்றி யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளித்ததாகத் தெரிகிறது, இதனையடுத்து நேபாள் எல்லையருகே இவருக்கு பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.