சென்னையில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் – சென்னை கமிஷனர் ஏ. கே. விஸ்வநாத்.


சட்டம் ஒழுங்கு பணியை பராமரிப்பதோடு, மரம் நட்டு அவற்றையும் பராமரியுங்கள் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ள சென்னை கமிஷனர் ஏ. கே. விஸ்வநாத் இவ்வருடத்திற்குள் 1 லட்சம் மரங்களை நடுவதற்கு திட்டமிட்டுள்ளார்
கடந்த ஆண்டு வர்தா புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி சென்னையின் பெருமளவு மரங்கள் விழுந்து நாசமாயின. பல ஆண்டு கால மரங்கள் வேரோடு சாய்ந்து, மீண்டும் சென்னையை மரம் நிறைந்த நகரமாக உருவாக்க பல வருடங்கள் ஆகும் என்று கவலையுற்றனர் சுற்று சூழல் ஆர்வலர்கள். இந்த நிலையில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து சென்னை முழுவதும் மரம் நட்டு பராமரிக்கும் பொறுப்பை கையில் எடுத்துள்ளார் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாத். அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள நீர்நிலை பகுதிகள், காவல் நிலைய வளாகங்கள், காவலர் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் மரம் நட்டு காவலர்கள் அதை பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன் தரும் மரங்களை வனத்துறை மூலம் பெற்று நடப்பட்டு வருகிறது. சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் காவல் துறையின் சார்பில் ஒரே நாளில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காவல் ஆணையர் மரக்கன்றுகளை நட்டு காவலர்கள் அனைவரையும் ஊக்குவித்தார். கடந்த 5-ம் தேதி உலகு சுற்று சூழல் தினத்தையொட்டி தொடங்கிய இப்பணி மூலமாக இதுவரை 28 ஆயிரம் மரக்கன்றுகள் சென்னை முழுவதும் நடப்பட்டுள்ளன.
குற்றங்களை தடுப்பது, குற்றவாளிகளை பிடிப்பது என கடமையாற்றவதோடு விட்டுவிடாமல் மரம் வளர்க்க அறிவுறுத்துவதன் மூலம் சமூக பொறுப்பையும் காவலர்களுக்குள் வளர்க்கும் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாத்தின் பணி பாராட்டுக்குரியது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.