தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடக்கம்.


தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 3 ஆயிரத்து 375 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான போட்டித் தேர்வு இன்று காலை 10 மணிக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 601 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 41 மையங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வை எழுதும் நிலையில், நண்பகல் ஒரு மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு ஒருங்கிணைப்பாளர்களாக 19 இணை இயக்குநர்களும், 7 ஏழு மண்டல அலுவலகங்களில் உள்ள இயக்குநர்கள் கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.