நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது ஜிஎஸ்டி வரிமுறை.


நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் புதிய வரிவிதிப்பைத் தொடங்கி வைத்தனர்.
ஜி.எஸ்.டி. அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் அங்கு திரண்டிருந்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், திரையுலகினர் உள்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பல்வேறு மாநில அரசுகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். கட்சிகளின் பார்வையை கடந்து நாட்டின் ஜனநாயகத்தை இச்செயல்பாடு வலுப்படுத்தியதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
சரியாக 12 மணிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மோடியும் பொத்தானை அழுத்தி ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்படுவதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒரே வரி, ஒரே நாடு, ஒரே சந்தையை புதிய இந்தியா உருவாக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசியல் மாறுபாடுகளைக் கடந்து, பல்வேறு கட்சிகள் ஆதரவுடன் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டிருப்பதாக அருண்ஜெட்லி குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அழைக்கப்பட்டிருந்தபோதும் அவர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளன.
ஜி.எஸ்.டி. வரி அறிமுகம் செய்யப்பட்டவுடன், நாட்டின் பல்வேறு நகரங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
ஜி.எஸ்.டி. வரி குறித்து விளக்கம் அளிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்துவிட்டதால், ஏற்கனவே இருந்து வந்த பல்வேறு வரிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.