தி.மு.க.வினர் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும் – மு.க.ஸ்டாலின்.


திமுக-வினர் பேனர் கலாச்சாரத்தைக் கைவிடவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காலில் விழுவதை நிறுத்தவேண்டும் என்றும், பொன்னாடைகளுக்குப் பதில் புத்தகங்கள் தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தபோது அதன் உடனடி விளைவுகளைக் கண்டு தாம் பெருமிதம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆடம்பர பேனர்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து பல மாதங்களான நிலையில் அதனை அலட்சியப்படுத்துவது போல அண்மைக்காலமாக சில நிகழ்ச்சிகளிலும் பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கியிருப்பதாக மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
பேனர் கலாச்சாரம், ஆடம்பரமும் அருவருப்பும் கலந்தது என்றும், தேவையற்ற ஆடம்பரமான இத்தகைய செயல், பொதுமக்களிடம் கடும் வெறுப்பையும் அதிருப்தியையும் உண்டாக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இனியும் திமுக-வினர் யாரேனும் பேனர் கலாச்சாரத்தைக் கடைப்பிடித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள மு.க.ஸ்டாலின், பேனர் கலாச்சாரத்தை வேரறுக்க உறுதியெடுப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.