அரசு மருத்துவமனையில் வீல்சேர் இல்லை.. நோயாளி கணவனை காலை பிடித்து இழுத்து சென்ற மனைவி! ஷாக் வீடியோ.கர்நாடகாவிலுள்ள  அரசு மருத்துவமனையொன்றில் வயது முதிர்ந்த நோயாளிக்கு எக்ஸ்ரே அறைக்கு செல்ல வீல்சேர் தரப்படாததால் அவரது மனைவியே அவரை தரதரவென இழுத்துச் சென்ற சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாக சுற்றி வருகிறது. 
இதையடுத்து சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. வயதுமுதிர்ந்த அந்த ஆண் நோயாளியை எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் செல்ல வீல்சேர் மறுக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி கால்கள் இரண்டையும் பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.

இயக்குநர் விளக்கம்: 
"இந்த வீடியோ 2 நாட்கள் முன்பு ஷூட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து எனக்கு தகவல் வந்ததும் மறைத்துவிட முயலவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்" என மருத்துவமனை இயக்குநர் சுஷில்குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மருத்துவமனையில் போதிய அளவுக்கு வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெட்சர்கள் உள்ளன. அப்படியிருந்தும் இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது எனக்கு புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
கர்நாடகாவில் அரசு மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட அவலம் நடைபெறுவது புதிது கிடையாது. மே 23ம் தேதி, கோலார் அரசு மருத்துவமனையின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், பிறந்து 2 நாட்களேயான குழந்தைக்கு காயம் ஏற்பட்டது.

கர்ப்பிணி பெண்கள் கடந்த மார்ச் 23ம் தேதி ஹூப்ளி மாவட்ட அரசு மருத்துவமனையில் 4 கர்ப்பிணி பெண்கள் ஒரே ஸ்ட்ரெட்சரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.