சென்னை வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் சரண்.


சென்னை வியாசர்பாடியில் ரவுடி தியாகராஜன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், 5 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
மாதவரம் தியாகு என்ற தியாகராஜன் வியாழனன்று, வியாசர்பாடி – முல்லை நகரில் தேநீர்க்கடை ஒன்றில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கடந்த 2015-ம் ஆண்டு போத்தீஸ் முரளி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பழிக்குப்பழியாக, தியாகராஜன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை அவர்கள் ஆய்வு செய்து வந்தனர்.
இந்நிலையில், தியாகராஜனை வெட்டிக் கொன்றதாக, சரண்ராஜ், வர்கீஸ், தேவா, திருநாவுக்கரசு, சக்திவேல் என்ற 5 பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று சரணடைந்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.