சென்னை வியாசர்பாடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.


சென்னையை அடுத்த வியாசர்பாடியில் பட்டப்பகலில் பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாதாவரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த தியாகராஜன், வியாசர்படியில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் தனது ஓட்டுனர் உரிமத்தைப் புதுப்பிக்க வந்துள்ளார். அப்போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயிற்சிப் பள்ளிக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், தியாகராஜனை சரமாரியாக வெட்டியது.
இதில் தலை கழுத்து மார்பு ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பலியானார். தகவலறிந்து வந்த போலீசார், தியாகராஜனின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகாள் யார்? கொலைக்கான காரணம் என்ன ? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட தியாகராஜன், கடந்த 2015ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்டவர் ஆவார். அவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் வேறு சில கொலை வழக்குகளும் விசாரணையில் உள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.