இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான்: விஜயகாந்த் வாழ்த்து.


இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக கருணாநிதி இன்றைக்கு இருக்கிறார் என்று திமுக தலைவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தனது 94-வது பிறந்தநாளும், சட்டப்பேரவையின் 60வது ஆண்டு விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கும் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி மட்டும்தான். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கருணாநிதியின் அரசியல் அனுபவமே சில அரசியல் தலைவர்களின் வயதாக இருக்கிறது. உங்களுடைய பிறந்தநாளும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருந்து நாட்டுக்கும், மக்களுக்கும், சேவை செய்ய வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.