வல்லூர் அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து.


திருவள்ளூர் அருகே உள்ள வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் தேசிய அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மொத்தம் ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இந்நிலையில், மூன்றாவது அலகின் ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் ஆகியவை எரிந்து நாசமாயின. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீவிபத்து காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது வல்லூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தியாகிறது. இதனிடையே 3ஆவது அலகில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.