கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைதிபோல் நடத்தப்பட்டேன்: வைகோ பேட்டி.


மலேசியாவில் தம்மை கைதி போல் நடத்தியதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமணத்தில் பங்கேற்பதற்கான சென்ற வைகோ, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர் இருப்பதாகக் கூறி அவரை குடிவரவு அதிகாரிகள் தனி அறையில் தங்க வைத்தனர். இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பிய வைகோ, மலேசியாவில் விமான நிலையத்திலேயே தம்மை 16 மணி நேரம் ஒரே இடத்தில் அமரவைத்ததாக தெரிவித்தார். இலங்கை அரசின் சதி காரணமாகவே மலேசிய அதிகாரிகள் தம்மை இவ்வாறு நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து, பிரதமருக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் வைகோ தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.