சென்னையில் வைர வியாபாரியிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு – ரவுடி கூட்டாளிகளுடன் கைது.


வைர வியாபாரியிடம் கொள்ளை அடித்த வழக்கில் தேடம்பட்டு வந்த பிரபல ரவுடியை சென்னையில் கைது செய்த போலீசார், அவனது கூட்டாளிகள் 8 பேரையும் கைது செய்துள்ளனர்.சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த ஒருவனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவனிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவன் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ட்ரிபிள் எஸ் என்கிற ஷ்யாம் சுந்தர் என்பதை கண்டறிந்தனர். விருகம்பாக்கத்தில் கடந்த மாதம் கேரள வைர வியாபாரி சூரஜ் என்பவரிடம் பட்டைத் தீட்டாத வைரம் வாங்குவது போல நடித்து 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தை கொள்ளையடித்த வழக்கில் ஷ்யாம் சுந்தர் தேடப்பட்டு வந்ததால், அவனை விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவனது கூட்டாளிகள் சிலர் வடபழனியில் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக அளித்த வாக்குமூலத்தை அடுத்து, அங்கு சென்று, சையது, மைக்கேல், விஜயகுமார், ஜெயசிங், கூடச் கர், ஜோசப் ராஜ், ஜெயப்பிரகாஷ், அமுதவாணன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதால், கொலைத் திட்டத்திற்காக தங்கியிருந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.