தமிழகத்தில் துணைவேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.


தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஆர்.ராஜசெல்வன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களும், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடங்களும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பணியிடங்களும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக் கழகங்களில் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் பணியிடமும், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் டீன் பணியிடமும் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. எனவே தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், டீன் பணியிடங்களை உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிற பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடத்தை நிரப்ப தேடல் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன என்றார். இதையேற்ற நீதிபதிகள், இது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.