அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.


2007ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட, அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் 6 மாதங்களுக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரன்முறைப்படுத்துவது தொடர்பான நீதிபதி ராஜேஸ்வரன் குழு பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து அமைச்சகம், கடலோரப் பகுதி, விமானப்படைத் தளம், ராணுவம், மலையிடப் பகுதி பாதுகாப்பு, தமிழ்நாடு நியூக்ளியர் விதிமுறைகளுக்கு இணக்கமாக கட்டிடம் இருக்க வேண்டும்
பொது இடங்கள், சாலைகள், தெருக்கள், அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்கள், நீர்நிலைப் பகுதிகள், உள்ளிட்டவற்றில் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு பொருந்தாது
சென்னை பெருநகர் பகுதியில் நிலத்தடி நீர்ப்பிடிப்புப் பகுதி, மற்றும் செங்குன்றம் நீர்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இயலாது
சாலை அகலம், பக்க இடைவெளி, தளப் பரப்புக் குறியீடு, வாகன நிறுத்துமிடம், திறந்தவெளிப் பகுதி உள்ளிட்டவை தொடர்பான விதிவிலக்குகள், தீப் பாதுகாப்பு மற்றும் கட்டிட உறுதித் தன்மைக்கு உட்பட்டு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன
கட்டிடங்களை வரன்முறைப்படுத்த விரும்புவோர் வழக்கமான வளர்ச்சிக் கட்டணம், கூடுதலாக உள்ள தளப்பரப்புக் குறியீட்டுக் கட்டணம், விதிமீறல் கட்டணம், வரன்முறைப்படுத்துவதற்கான அபராதத் தொகை உள்ளிட்டவற்றை செலுத்த வேண்டும்.
அனுமதியற்ற மற்றும் விதிமீறல் கட்டிடங்களின் உரிமையாளர்கள், கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஆறு மாதங்களுக்குள் உரிய கட்டணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வரன்முறைப்படுத்த தகுதியற்ற கட்டிடங்களுக்கு குடிநீர், கழிவுநீர், வடிகால் இணைப்புகள் மற்றும் மின்சார இணைப்புகளை துண்டிக்கவும், சொத்துக்களை பிறருக்கு விற்கவும் தடை விதிக்க குடிநீர் வாரியம், மின்சாரவாரியம், பதிவுத்துறை ஆகியவை தத்தம் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.