திருச்சி அருகே 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.


திருச்சி அருகே பழிக்குபழியாக இரண்டு பேரை ஓடஓட விரட்டி, கொடூரமாக வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருச்சனம்பூண்டி பகுதியைச் சேர்ந்த வின்செண்ட், தனது நண்பரான செந்திலுடன், திருச்சியிலிருந்து திருச்சனம்பூண்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி கல்லணை சாலையில் ஓயாமரி சுடுகாடு அருகே வந்தபோது, ஸ்கார்பியோ காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், வின்செண்ட் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரையும் காரில் வந்த கும்பல் வெட்டிக் கொல்ல முயன்றது. உயிர்பிழைக்க சாலையோரம் ஆற்றில் இறங்கி ஓடிய இருவரையும் விடாமல் துரத்திய கும்பல், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியது.
இதில் தலை சிதைந்த வின்செண்ட் மற்றும் செந்தில் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டுவிட்டு கொலைக்கும்பல் காரில் ஏறி தப்பியது. இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் விட்டுச் சென்ற ஆயுதங்களை கைப்பற்றி, கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வின்செண்ட் மற்றும் செந்தில் பழிக்குப் பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பஞ்சாபிகேசன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செந்தில், வின்செண்டை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த இருவரையும் பஞ்சாபிகேசனின் ஆதரவாளர்கள் வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.