சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகே உணவகம் ஒன்றில் திடீர் தீ விபத்து.


சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணி 3-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் அதன் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
தீயினால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை ஜாகட்டர் எந்திரங்களைக் கொண்டு இடிக்கும் பணி 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இடிக்கும் பணிகள் முழுவதும் முடிய இன்னும் 4 நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நேற்றுவரை கட்டிடத்தின் 100 மீட்டர் சுற்றளவிலான கடைகள் திறக்கப்படாத நிலையில் இன்று 50 மீட்டருக்கு உட்பட்ட கடைகள் மட்டும் மூடப்பட்டிருந்தன.
உஸ்மான் சாலையிலும், அருகிலுள்ள பாலத்தின் மீதும் போக்குவரத்து தடை நீடிப்பதால், வெங்கட் நாராயாணா சாலை வழியாகவே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இதனிடையே சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகே உள்ள உணவகம் ஒன்றின் சமையல் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து புகைபோக்கி வழியாக அதிக அளவில் புகை வெளியேறியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர் அடுத்த சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகிலேயே ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.