தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்.


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 13 இளநிலை வேளாண் பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக, மே 12ம் தேதி முதல் இணையத்தளத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இதையடுத்து மாணவர்கள் பெற்றுள்ள கட் ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி கடந்த 10ஆம் தேதி வெளியிட்டார். கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 820 இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வு ஜுன் 16ஆம் தேதி தொடங்கியது.
16ஆம் தேதி சிறப்புப் பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் , பொதுப்பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இதில் 600 மாணவ மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் 6 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி வழங்கினார்.
ஜூன் 28 ஆம் தேதி தொழில்கல்விக்கான கலந்தாய்வும், ஜூன் 30ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. ஜூலை 24ஆம் தேதி கல்லூரி துவங்க உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.