மதுக்கடைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு.


டாஸ்மாக் மதுக்கடைகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்பட்டுவரும் மதுக்கடைகளை அகற்றக்கோரி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சிலர் மதுக்கடைகளை சூறையாடி வருகின்றனர். பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுத்து மதுக்கடைகள் மீது தாக்குதல் நடத்துவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதால், சட்டத்தை மீறி மதுக்கடைகள் தாக்குதல் நடத்துபவர்கள் மீது, குறிப்பாக பெண்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அடங்கிய அமர்வு,ஜூலை 3ஆம் தேதிக்குள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலர், டாஸ்மாக் நிறுவன தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.