பொய் வழக்கில் கணவர் சிறை சென்றதால் மனைவி தற்கொலை.


ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாதாங்களாக வீடுகளில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஓமலூர் போலீசார், ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த மீன்கார மாரியப்பன் என்பவரையும், அவரது உறவினர் மணி என்பவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து, இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், கைது நடவடிக்கையோடு நில்லாமல், மணியின் வீட்டுக்கு சென்ற ஓமலூர் போலீஸார், இரண்டரை லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்ததாகவும், ஒரு லட்ச ரூபாயை மிரட்டி வாங்கியதாகவும், மணியின் மனைவி ஸ்ரீதேவி குற்றம்சாட்டியுள்ளார்.
செங்கற்சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் ஸ்ரீதேவிக்கு, 12 வயது மற்றும் 9 மாதத்தில் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க இயலாத போலீஸார், கணக்கு காட்டுவதற்காக தனது கணவரை பொய்வழக்கில் கைது செய்ததாகவும், அதை போலீஸாரே ஒப்புக்கொண்டதாகவும் ஸ்ரீதேவி கூறியுள்ளார்.
கணவர் மணியை பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிய போலீஸார், அதன் பிறகு தாங்கள் அடையாளம் காட்டும் நகை கடையில் திருட்டு நகைகளை விற்பனை செய்ததாக பொய்கூற வேண்டும் எனவும், அங்கிருந்து நகையை வாங்கிக்கொண்டு உன்னை விட்டுவிடுகிறோம் என கூறியதாகவும் ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.
சேலம், ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் போலீஸார் கூறிய நகை கடைகளை தானும் அடையாளம் காட்டியதாக கூறியுள்ள ஸ்ரீதேவி, அந்த கடைகளில் இருந்து நகைகளை பறித்துக்கொண்ட பிறகும் தங்கள் மீது பொய் வழக்கு போட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
மணி குடும்பத்தினர் நகை திருடியதாக ஊடகங்களில் செய்தி வெளியான பிறகு, தனக்கு செங்கற்சூளைகளில் வேலை மறுக்கப்பட்டதாகவும், 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் பள்ளிக்கூடத்தில் அவமானங்களை சந்தித்ததாகவும் ஸ்ரீதேவி வேதனை தெரிவித்தார்.
கணவர் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில், செங்கற்சூளையிலும் வேலை கிடைக்காமல், போலீஸாருக்கும் பணம் கொடுக்க வழியில்லாமல், அன்றாட வாழ்வுக்கே அல்லல்பட்ட ஸ்ரீதேவி, போலீஸாரின் காலில் விழுந்து கதறியபோதும் அவர்கள் மனமிறங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
வாழ்வதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில், தனது இரண்டு மகள்களுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்த ஸ்ரீதேவி, தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தோர் மூவரையும் காப்பாற்றி, அவர்களை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, போலீஸாரால் தனது குடும்பம் அனுபவித்த வேதனைகளை,செய்தியாளரிடம் ஸ்ரீதேவி வாக்குமூலமாக அளித்திருந்தார். இதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீதேவி, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது குழந்தைகள் இருவரும் சிகிச்சையில் உள்ளனர். பொய் வழக்கு போட்டு மணியை போலீஸார் சிறைக்கு அனுப்பியதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவி ஸ்ரீதேவியும் மரணம் அடைந்துள்ளதால், அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக கருதி ஓமலூர் போலீஸார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.