மத்திய அரசின் சென்னை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தில் போராட்டம்.


திருவள்ளூர் மாவட்டம் மணலியில் உள்ள மத்திய அரசின் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணலியில், மத்திய அரசிற்கு சொந்தமான சென்னை பெட்ரோலிய கார்பரேஷன் எண்ணெய் நிறுவனம் இயங்கிவருவகிறது. இதில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள், அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் உயர்த்தி அறிவித்த ஊதியத்தை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு பணி பாதிக்கப்பட்டது. தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.