ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு அதிமுக அரசு துணை போகக் கூடாது: ஸ்டாலின்.


விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு அதிமுக அரசு துணை போகக்கூடாது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த மாவட்ட மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றளவும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் உள்ள மீத்தேன் துரப்பன குத்தகையை தங்கள் பெயருக்கு மாற்றித்தருமாறு தமிழக அரசிடம் ஜெம் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 27-ம் தேதி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுடன் மத்தியஅரசு ஒப்பந்தம் செய்தது. மக்கள் விரும்பவில்லை என்றால் அத்திட்டத்தை கொண்டுவர மாட்டோம் எனக்கூறிய பாஜக தலைவர்களும், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் எனக்கூறிய முதல்வர் கே.பழனிசாமியும் இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் செய்துள்ள ஜெம் லேபராட்டரீஸ் நிறுவனம், நெடுவாசல் குத்தகையை ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து தங்களுக்கு மாற்றித்தருமாறு தமிழக அரசுககு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசுக்கு அதிமுக அரசு திரைமறைவில் துணையாக இருப்பது தங்கள் சுயநலனை காப்பாற்றிக்கொள்ள முதல்வரும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் செயல்படுவதாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஹரிபிரசாத், ''குத்தகையை எங்கள் பெயருக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமவளத் துறையுடனான கடிதப் போக்குவரத்தினை மீத்தேன் எடுக்கும் திட்டத்தின் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நடவடிக்கையாகப் பார்க்கிறோம். விரைவில் குத்தகை மாற்றித்தரப்படும் என்று நம்புகிறோம்'' என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஜெம் நிறுவனமும், தமிழக அரசும் ஏற்கனவே கடிதத் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜெம் நிறுவனத்துக்கு அதிமுக அரசு ரகசியமாக முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
நெடுவாசல் போராட்டக் குழுவினரிடம், விவசாயிகளைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது. நெடுவாசல் கிராமத்தில் வணிகரீதியாக ஹைட்ரோகார்பன் எடுக்க சுரங்க குத்தகை உரிமத்தை தமிழக அரசு வழங்காது என முதல்வர் பழனிசாமி உறுதி அளித்திருந்தார். ஆனால், இப்போது திட்டத்தை செயல்படுத்த ஜெம் நிறுவனத்துக்கு உதவி செய்வது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும்.
ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் நெடுவாசல் திட்டம் குறித்த அனுப்பப்பட்ட கடித விவரங்களை முதல்வர் வெளியிடவில்லை. எனவே, ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு துணை போகப் போகிறதா என்பது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜெம் நிறுவனம் - தமிழக அரசு இடையேயான கடிதப் போக்குவரத்து விவரங்களையும் முதல்வர் வெளியிட வேண்டும். விவசாயிகளின் நலன்களைப் பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு அதிமுக அரசு துணை போகக்கூடாது'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.