வேலை இழந்து, உணவிற்க்கு வழியின்றி சவுதிஅரேபியாவில் தவிக்கும் தமிழர்கள்.


சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏராளமான இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். திரைகடல் ஓடியும் திரவியம் தேடச்சென்ற தமிழர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது
சவுதி அரேபியாவில் தங்கி கட்டுமானபணிகளை செய்துவந்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 பேர் உள்பட 150 இந்தியர்கள் ரியாத்தில் தவித்து வருவதாகவும் உதவிகேட்டும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தங்களை பணிக்கு அழைத்து சென்ற நிறுவனமோ 16 மாதங்களாக சம்பளம் தராமல் இழுத்தடித்துவந்த நிலையில், அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தலைமறைவாகி விட்டதால் அங்கிருந்து இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.
தமிழர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் அங்கு தவிப்பதாகவும் தங்களை மீட்டு தாய் நாட்டிற்கு அழைத்துச்செல்ல வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சவுதியில் வேலை இழந்து தவிக்கின்ற இந்தியர்களை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.