ஜி.எஸ்.டியை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு போராட்டம்.


ஜி.எஸ்.டி.யில் அதிக வரி வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். நள்ளிரவு முதல் அமலாகவுள்ள ஜி.எஸ்.டி.யில் பட்டாசுக்கு 28 சதவீத வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள், பட்டாசுக்கு 5 அல்லது 12 சதவீத வரி நிர்ணயிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
சிவகாசியில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஆலைகள் மற்றும் கடைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளதுடன், பல கோடிக்கணக்கிலான ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலும் ஜி.எஸ்.டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தினர் இந்த கடை அடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஜி.எஸ்.டியில் மரச்சாமான்களுக்கு 28 சதவீத வரியும், மூலப்பொருளான மரத்துக்கு 18 சதவீத வரியும் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மர வியாபாரிகள் மற்றும் மரச்சாமான் உற்பத்தியாளர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சூளையில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வரிவிதிப்பை பரிசீலிக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் கடை அடைப்பு நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இன்றைய வேலைநிறுத்தத்தால் 120 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசுக்கு 20 கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.