மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.


பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார்.
அப்போது மாணவியை வழிமறித்த 6 பேர் கும்பல், அவரை கடத்திச் சென்று புறநகர் ரயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரம் என்பதால், ரயிலில் பொதுமக்கள் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட கும்பல், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளது. காலையில் தண்டவாளம் அருகே ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மாணவி, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி, தற்போது உயிருக்கு போராடி வரும் நிலையில், ஒருவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ள போலீசார், தப்பியோடிய மேலும் 5 பேரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தண்டவாளம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மீட்டுக் கொண்டுவந்தபோது, பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்காமல், 6 மணி நேரம் தாமதப்படுத்தியதாக, மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.