அரசுத்துறை அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல- உச்சநீதிமன்றம்.


அரசுத்துறை அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சிஆர்பிஎஃப் காவலர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அந்த பணிநீக்க உத்தரவை ரத்து செய்த அசாம் கவுகாத்தி உயர்நீதிமன்றம், சிஆர்பிஎஃப் உயரதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கும் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் வரும் 19ஆம் தேதிக்குள் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கவுகாத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜித் குமார் சின்காவின் வாதங்களை ஏற்கவில்லை.
தேவைப்பட்டால் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, உத்தரவை மாற்றியமைக்க கோரி உயர்நீதிமன்றத்தையே அணுகலாம் என்று கூறிய நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அதிகாரிகள் என்பவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்று குறிப்பிட்டது.
மத்திய அரசு கடைசி நேரத்தில் இங்கு வந்து முறையிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் சென்று சிஆர்பிஎஃப் அதிகாரி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.