மதுக்கடை முற்றுகையில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு.


சேலம் அருகே மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நாகியம்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, கிராம மக்கள் அந்த மதுக்கடையை முற்றுகையிட்டனர். அப்போது, பெண்கள் பொங்கலிட்டும், ஒப்பாரி வைத்தும் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்துபோகுமாறு அறிவுறுத்தினர்.இதற்கு அவர்கள் உடன்படாததால், போலீஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் ஆத்திரத்தில் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும், நாற்காலிகளையும் சாலையில் வீசினர்.
தள்ளுமுள்ளு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.