பத்திரப்பதிவு விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என புகார்.


பத்திரப்பதிவு விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி, சேலம் மாவட்டம் சீல்நாய்க்கன்பட்டியில் பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 20ந்தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை மறுபதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி, சேலம் மாவட்டம் சீல்நாய்க்கன்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை பொதுமக்கள் மற்றும் நிலத்தரகர்கள் முற்றுகையிட்டனர். நிலங்களை வைத்து வங்கி கடன் பெற்றதாக கூறிய பொதுமக்கள், நிலத்தை விற்க முடியாததால், கடன் தொகையை கட்ட முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவு தொடர்பான அரசாணை வராததால், மறுபதிவு நடைபெறவில்லை என்று அதிகாரிகள் பதிலளிப்பதாக பொதுமக்கள் கூறினர். இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தையும் நிலத்தரகர்கள் முற்றுகையிட்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.