ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த கர்ணன், தலைமை நீதிபதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மோதல் காரணமாக, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
கொல்கத்தா சென்ற பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் கர்ணனுக்கு மோதல் ஏற்பட்டது. கர்ணனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால், உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தலைமறைவான நீதிபதி கர்ணன், சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அடுத்தடுத்து அந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேற்கு வங்க போலீஸார் கர்ணனை தீவிரமாக தேடி வந்தனர். சுமார் ஒரு மாத காலத்துக்கு மேல் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்ட கர்ணன், தலைமறைவின் இடையே, கடந்த 12-ம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், அவர் கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே, பண்ணை வீடு ஒன்றி தங்கி இருப்பதை மேற்கு வங்க போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, தமிழக போலீஸாருக்குகூட தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக கர்ணனை கைது செய்த போலீஸார், அவரை விமானம் மூலம் மேற்கு வங்கம் அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.