விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகள் அமைக்க தடை இல்லை.


உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்றும், விதிகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான கிராமசபைத் தீர்மானங்கள் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த தடா பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தங்கள் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். கிராமசபைக் கூட்டத்தில் எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தங்களது கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஒரே வாரத்தில் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், அந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார். இன்றைய விசாரணையின்போது, எங்கெங்கு அமைக்கலாம் எவ்வளவு தூரத்தில் அமைக்கலாம் என்ற உச்சநீதிமன்ற விதிகளைப் பின்பற்றியே டாஸ்மாக் கடைகள் அமைக்கப்படுவதாக டாஸ்மாக்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்றலாம் என்ற உத்தரவு குறிப்பிட்ட அந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை திறக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், கிராமசபைத் தீர்மானங்கள் விதிகளை பின்பற்றும் டாஸ்மாக் கடைகளை கட்டுப்படுத்தாது என்று கூறினர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.