நடப்பு நிதியாண்டில் தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் -ரிசர்வ் வங்கி.


தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை நிலை நடப்பு நிதியாண்டில் மேலும் மோசமடையும் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2016-17 நிதியாண்டுக்கான மாநிலங்கள் பற்றிய புள்ளிவிவரத் தொகுப்பு என்ற கையேட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, 1991ஆம் ஆண்டில் 18 ஆயிரத்து 700 கோடியாக இருந்த மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை, 2016-17 நிதியாண்டில் 4 லட்சத்து 93 ஆயிரத்து 360 கோடியாக அதிகரித்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 26 ஆண்டுகளில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை எப்படி பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
இந்த வரிசையில், அரசின் இலவசங்களுக்குப் பெயர்பெற்ற தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை, 1991-92 நிதியாண்டில், ஆயிரத்து 130 கோடி ரூபாயாக இருந்து, 2016-17 நிதியாண்டில் 32 ஆயிரத்து 320 கோடியாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரத்து 530 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை உயர்ந்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளின் கணிப்புகளின்படி, நிதிப் பற்றாக்குறை நிலை, நடப்பு நிதியாண்டில் சற்றே மேம்பட்டு 4 லட்சத்து 49 ஆயிரத்து 520 கோடியாக குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை நிலை நடப்பு நிதியாண்டில் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குஜராத், ஆந்திரப்பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை நிலை மேலும் மோசமடையும் எனவும் ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.