பத்திரப்பதிவு குறித்த நீதிமன்ற ஆணையை தமிழக அரசு உடனடியாக அமுல்படுத்த கோரிக்கை.


பத்திரப்பதிவு குறித்த நீதிமன்ற ஆணையை தமிழக அரசு உடனடியாக அமுல்படுத்தாவிட்டால் குடும்பத்துடன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், ரியல் எஸ்டேட் தொழிலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் பத்திரப்பதிவு துறையில் ஒற்றை சாளர முறையை அமுல்படுத்த வேண்டும், பத்திரபதிவு அலுவலகங்களில் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும், உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.